செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (14:59 IST)

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்

சொத்து குழிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலஅமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்சது. இந்த வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனி நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க.பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்
 
இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 3 வாரத்தில் இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த பின்னர் 8 வாரங்களுக்கு பிறகு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதிகள் ஜூலை மாதம் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். 
 
ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தவறு உள்ளது. இந்த வழக்கில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் தவறு உள்ளதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் சொத்துகளை கண்கிட்டு நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.