வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (11:05 IST)

'பாஜக நடவடிக்கையை ஜெயலலிதா ஏற்கமாட்டார்’ - பாஜகவை தாக்கும் அதிமுக அமைச்சர்

ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கமாட்டார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.


 

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் தில்லியில் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத் தில், தமிழக அரசு சார்பில், அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், ”மத்திய அரசு 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து, கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டதை விட, அதிக அளவில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளும், அமைப்புளும், ஏடிஎம்களும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கமாட்டார்.

தற்போது ஏழை, எளிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுசார்பில் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.