ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது: பரமானந்தா

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது


Caston| Last Updated: வியாழன், 10 மார்ச் 2016 (15:45 IST)
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று ஜெயலலிதா வழக்கறிஞர் பரமானந்த கட்டாரியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்வாராய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.
 
இந்த மேல் முறையீட்டு விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று ஜெயலலிதா தரப்பு வாதம் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பரமானந்தா கட்டாரியா ஆஜராகி வாதாடினார்.
 
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றும், ஏராளமான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இந்த வழக்கை விசாரிப்பது தேவையற்றது.
 
இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வே விசாரிக்க முடியும். அதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பரமானந்தா கட்டாரியா வாதாடினார். இதனை கேட்ட நீதிபதிகள் இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து பரமானந்தா கட்டாரியா உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்தார்.


இதில் மேலும் படிக்கவும் :