செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (12:59 IST)

ஜெயலலிதா வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது: வாதத்தை தொடர உள்ளார் ஆச்சாரியா

ஜெயலலிதா வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது: வாதத்தை தொடர உள்ளார் ஆச்சாரியா

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாராணை நாளை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.


 
 
நாளை நடைபெறும் இந்த விசாரணையில் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தனது வாதத்தை தொடர உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்தது.
 
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. இதன் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தாவேயின் வாதத்தை தொடர்ந்து ஆச்சாரியா அந்த வாதத்தை தொடர்ந்தார். அவர் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள பிழைகளை முன் வைத்து வாதம் செய்தார்.
 
ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என கூறப்படும் நிறுவனங்கள் பற்றி ஆச்சாரியா வாதிட்டார். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 
மீண்டும் இந்த விசாரணை நாளை தொடங்க உள்ளது. நளை நடைபெறும் இந்த விசாரணையில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா தனது வாதத்தை தொடருவார். தமிழக தேர்தல் வரும் வேளையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவின் விசாரணையும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.