ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு ஜெயலலிதா, வீரமணி இரங்கல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 21 மார்ச் 2016 (18:15 IST)
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, திராவிட கழக தலைவர் வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
 
தமிழ் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா சரித்திரத்தை ஆவணப்படுத்திய நபர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்.
 
வயோதிகம் மற்றும் உடல்நலைக் கோளாறால் தனது 88 வது வயதில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
ஜெயலலிதா:
 
சினிமா உலகில் நீண்ட கால அனுபவம் உள்ள 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. பிலிம் நியூஸ்' ஆனந்தன் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கி.வீரமணி:
 
தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.) பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88. முதுமையால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.  
 
தமிழ் திரைப்படத்துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது.
 
திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு விருது அளித்துச் சிறப்பு செய்யப்பட்டது. அவர் பிரிவால் வருந்தும் அவரின் குடும்பத்தாருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இதில் மேலும் படிக்கவும் :