வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 6 ஆகஸ்ட் 2014 (16:48 IST)

தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசும் போது குறுக்கிட்டு பேசியதால் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து பேச தேமுதிக உறுப்பினர்களுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
மேலும், தேமுதிக எம்எல்ஏக்கள் மீது உள்ள வழக்குகளின் பட்டியலையும் முதல்வர் வாசித்தார்.
 
அப்போது முதல்வர் பேசுவதற்கு குறுக்கீடு செய்யும் வகையில் தேமுதிக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். இதனால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
 
அவைக்கு வெளியே வந்த தேமுதிகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.