வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2015 (11:45 IST)

மீண்டும் பாய்ந்தது அவதூறு வழக்கு: நக்கீரனுக்கு எதிராக ஜெயலலிதா அவதூறு வழக்கு

தமிழ் வாரப் பத்திரிக்கை நக்கீரன் மீது அவதூறான செய்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டி கிரிமினல் அவதூறு வழக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

வரவிருக்கும் 2016 தேர்தலுக்காக தற்போது இலவச திட்டங்களை மக்களுக்கு ஜெயலலித விநியோகிப்பதாக செப்டம்பர் 5 ஆம் தேதி ஒரு கட்டுரை வெளியானது இதனை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரை தன்னிச்சயாக தீங்கிழைக்கும் விதமாக இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது, பத்திரிக்கை ஆசிரியர், நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் வெளியீட்டாளர் நக்கீரன் கோபால் ஆகியோரும் இந்த மனுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500 கீழ் இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பணியை மரியாதை குறைவாக அவதூறாக சித்தரிப்பதாக அரசு வழக்கரிஞர் மூலம் இந்த புகார் கூறப்பட்டுள்ளது.