வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (16:26 IST)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இறுதி வாதம் நிறைவு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் இன்றுடன் நிறைவு பெற்றது.
 
இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமித் தேசாய் கடைசி நாளாக இன்று இறுதி வாதம் செய்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணி சங்கர் 9 நாட்கள் இறுதிவாதம் செய்துள்ளார். இளவரசி, சுதாகரன் தரப்பில் அமித் தேசாயின் 8 ஆம் நாள் வாதத்துடன் இறுதிவாதம் நிறைவு பெற்றது.
 
வழக்கறிஞர் குமாருக்கு மட்டும் நாளை 30 நிமிடம் வாதிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் குற்றம்சாற்றப்பட்டவர்கள் தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை நாளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மூன்று நாட்கள் தொகுப்பு வாதம் நடத்தப்படும் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் விளக்கமளித்துள்ளார். எழுத்துப்பூர்வமான வாதத்தை படித்துவிட்டு அதனடிப்படையில் தொகுப்பு வாதம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
பவானி சிங் நடத்தவுள்ள வாதத்துடன் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.