1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says about dmk rhymes

ஆட்சியில் இல்லாதபோது கோபேக், ஆட்சிக்கு வந்தால் மோடி கம்கம்: ஜெயகுமார் கிண்டல்

jayakumar
ஆட்சியில் இல்லாத போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் மோடி கோபேக் என்றும், ஆட்சியில் இருக்கும் போது மோடி தமிழகத்திற்கு வந்தால் மோடி கம்கம் என்றும் கூறுவது திமுகவின் வழக்கமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
 
 கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் மோடியை கோபேக் மோடி ஹேஷ்டேக்கை வரலாக்குவது வழக்கம்  என்பது தெரிந்ததே 
 
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி கம்கம் என வரவேற்று வருகிறது.  திமுகவின் இந்த செயல் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சியில் இல்லாதபோது மோடி மோடி கோ கோ என்று சொன்ன திமுக தற்போது மோடி மோடி கம்கம் என்று கூறுகிறது என்றும் இது தான் திமுகவின் ரைம்ஸ் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கரண்ட் பில் ரூ.3,419 கோடி: பார்த்தவுடன் மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி