ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்


K.N.Vadivel| Last Modified வியாழன், 17 டிசம்பர் 2015 (05:16 IST)
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, மதுரையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-
 
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே, வரும் தைத் திருநாளை முன்னிட்டு, ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
 
 ஆனால், அதற்குரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, அவசரச் சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :