சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் பகுதிகளில் சிஏஏக்கு எதிராக பேரணி..

Arun Prasath| Last Modified சனி, 25 ஜனவரி 2020 (17:22 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல அமைப்புகள் போராடி வருகிற நிலையில் சென்னை பாரிமுனையில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கேரளாவை போல் தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் தஞ்சாவூர், திருவாரூர்,கடலூர் ஆகிய பகுதிகளிலும் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :