சுவாதி கொலையாளி ராம்குமாரா? முத்துக்குமாரா?: தஞ்சாவூரில் இருக்கிறாரா உண்மை குற்றவாளி?

சுவாதி கொலையாளி ராம்குமாரா? முத்துக்குமாரா?: தஞ்சாவூரில் இருக்கிறாரா உண்மை குற்றவாளி?


Caston| Last Modified வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (12:59 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் உண்மை குற்றவாளி முத்துக்குமார் என்பவர் தான் எனவும் அவர் தற்போது தஞ்சாவூரில் இருப்பதாகவும் தமிழச்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

 
 
ஃபேஸ்புக்கில் தொடர்ந்து சுவாதி கொலை வழக்கு குறித்து பதிவிட்டு வரும் தமிழச்சி என்பவர் தற்போது பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின், தந்தை மற்றும் தாய் பற்றி கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், சுவாதியை கொலை செய்தவர் பெயர் ‎முத்துக்குமார்‬. தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறார். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள்.
 
இவர்களை பாதுகாப்பது சந்தான கோபலகிருஷ்ணனும் அவருடைய தம்பியும். அவர்கள் திட்டங்களுக்கு உடந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர் என அவர் கூறியுள்ளார்.
 
தொடர்ந்து கூறிய அவர் இது தவறான பதிவு என்றால், சுவாதியின், தந்தை மற்றும் அவரது சித்தப்பா ஆகியோர் தன்மீது வழக்கு தொடரலாம். இது குறித்தான ஆதாரம் என்னிடம் உள்ளது, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிக்க தயார் என கூறியுள்ளார்.
 
முன்னதாக ராம்குமாரின் தந்தை அளித்த பேட்டி ஒன்றில் காவல்துறை முத்துக்குமார் எனக்கூறி தனது மகன் ராம்குமாரை கைது செய்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :