1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (14:59 IST)

ஒருதலைக் காதலை ஆதரிப்பதா? - நீயா நானாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் பிரபல எழுத்தாளர்

விஜய் டிவி நடத்திய நீயா நானா நிகழ்ச்சியில் ஒருதலைக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்நிகழ்ச்சி பிரபல எழுத்தாளர் சுகிர்த ராணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சுகிர்த ராணி இவ்வாறு எழுதியுள்ளார்:
 
'ஒருதலையாய்க் காதலிக்கும் ஆண்கள், எதிர்க்கும் யுவதிகள்' என்னும் தலைப்பு நீயா நானாவில். ஒருதலைக் காதலால் பெரும் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் உள்ளாவது பெண்கள்தான்.
 
ஆசிட் வீசப்பட்ட காரைக்கால் வினோதினி, வித்யா, வகுப்பறையில் கட்டையால் தாக்கிக் கொல்லப்பட சகோதரி,தேவாலயத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சகோதரி இப்படி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது..இவர்களைப்பற்றி யாரும் மூச்சுக்கூட விடவில்லை கோபி நாத் உட்பட.
 
விருந்தினர்களும் ஒருதலைக் காதலை நியாயப்படுத்தியும்,ஒருதலைக் காதலைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்தப்படுத்தியே பேசினார்கள். திரைப்பட பாடல் எழுதும் ஒரு விருந்தினர் 'அங்கமே அங்காடியாக' என்னும் வரிகளை உள்ளடக்கிய பெண்களை இழிவுபடுத்தும் கவிதை ஒன்றைக் கூறினார்.
 
சமூக நோக்கோடு அணுக வேண்டிய தலைப்பை ஆண்திமிரோடும் ஆணாதிக்கத்தோடும் பெண்ணை உடைமைப் பொருளாகவும் அணுகியிருக்கிறார்கள் இன்றைய நீயா நானாவில்.
 
ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ளாத ஆண்களை, பெண்கள் வெட்டிச் சாய்த்ததாக, ஆசிட் ஊற்றியதாக பெண்வரலாறு இல்லை. நீயா நானாவுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
 
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.