செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2025 (12:03 IST)

கைக்குட்டையால் முகத்தை துடைப்பது கூட குற்றமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கைக்குட்டையால் முகத்தை துடைப்பது கூட குற்றமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்த நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் எதிர்கட்சியாக இருந்தபோது பிரதமர் வந்தபோது கருப்புக்கொடி காட்டினார்கள். இப்போது வெள்ளைக் குடை பிடித்து வரவேற்கின்றனர். 

 

துணை குடியரசு தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து சொல்லவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் அரசாங்க காரிலேயேதான் சென்றேன். உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன். அதை எடுத்து வைத்துக் கொண்டு அரசியல் செய்வது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது” என கூறியுள்ளார்