தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
siva| Last Updated: வெள்ளி, 14 மே 2021 (15:03 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது 13 பேர் பலியான நிலையில் அது குறித்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது அந்த விசாரணையின் அறிக்கையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தார்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணையை ஜெகதீசன் அவர்கள் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணை தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் சற்று முன்னர் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்
தூத்துக்குடி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து தீவிர விசாரணை செய்து இந்த இடைக்கால அறிக்கையில் சமர்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யும்போது தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :