செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 24 டிசம்பர் 2016 (08:54 IST)

சசிகலாவிடம் வருமான வரித்துறை சோதனை?: கைது செய்யவும் திட்டம்!

சசிகலாவிடம் வருமான வரித்துறை சோதனை?: கைது செய்யவும் திட்டம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. குறிப்பாக ஆளும் கட்சி வட்டாரத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைகள் தான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அந்த இடத்தில் பன்னீர்செல்வம் தான் இருக்க வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். காரணம் இரண்டு முறை ஜெயலலிதாவாலே முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம். இதைத்தான் மத்தியில் உள்ள மேலிடமும் விரும்புகிறதாம்.
 
ஆனால் ஜெயலலிதா இறந்த மறுகனமே சசிகலா தரப்பு அந்த இடத்தை பிடிக்க முயற்சிகளை வேகமாக எடுத்தது. சின்னம்மா சின்னம்மா என கட்சியின் ஒருசிலர் தூக்கி வைத்து சசிகலாவை கொண்டாடினார்கள். அவர் தான் பொதுச்செயலாளராக வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தமிழகத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை குறிவைத்து மடக்கிய வருமான வரித்துறை அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான ரகசியங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சசிகலா வட்டாரத்திலும் அதிரடியாக சோதனை நடத்த திட்டம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு சசிகலா தரப்பு தடையாக இருந்தால் அவரை கைது செய்யவும் தயங்காதாம் மேலிடம். இவ்வாறு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கர்டனுடன் நெருக்கத்தில் இருந்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.