நாளை எம்.எல்.ஏக்களுக்குப் பதவி ஏற்பு விழா !

Tamilnadu
Sinoj| Last Updated: திங்கள், 10 மே 2021 (16:37 IST)


நாளை எம்.எல்.ஏக்களுக்குப் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தற்காலிய சபாநாயகம் பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி
ஏற்றுக்கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு
புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிக்கப்பட்ட நிலையில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை கூடும் மே 11 ஆம் தேதி எம்.எல்.ஏக்களுக்கு கு.பிச்சாண்டி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் கு.பிச்சாண்டி நாளை எம் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,
என் வேலையை சிறப்பாகச் செய்வேன் என சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :