உயிர் உள்ளவரை எனது பாடல் தொடரும்: கோவன் ஆவேசம்


K.N.Vadivel| Last Updated: வியாழன், 19 நவம்பர் 2015 (04:29 IST)
எனது உயிர் உடலில் உள்ளவரை எனது பாடல் தொடரும் என மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரசார பாடகர் கோவன் தெரவித்துள்ளார்.
 
 
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி , மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் பாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரசார பாடகர் கோவன். பின்பு நீதி மன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடும் போராட்டத்திற்கு பின்பு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
 
ஜாமீனில் வெளியி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரசார பாடகர் கோவன் கூறுகையில், மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் பாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டேன். மக்களுக்காக கைது செய்யப்படுவது மகிழ்ச்சியே. எனது கைது சம்பவத்தை  கண்டித்துப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
 
எந்த அடக்குமுறைக்கும் நான் அடங்கமாட்டேன். எனது உயிர் உடலில் உள்ளவரை எனது பாடல் மக்களுக்காக தொடரும் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :