நிலக்கரி இறக்குமதியில் ரூ.1,500 கோடி ஊழல்: கருணாநிதி குற்றச்சாட்டு

நிலக்கரி இறக்குமதியில் ரூ.1,500 கோடி ஊழல்: கருணாநிதி குற்றச்சாட்டு


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 3 மே 2016 (04:14 IST)
தமிழகத்தில், நிலக்கரி இறக்குமதியில் ரூ.1,500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், மின்வாரியத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் தேவைக்காக 140 டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
 
தற்போது விலை குறைந்துள்ள நிலையில், ஒரு டன் நிலக்கரி 5,752 ரூபாய்க்கு வாங்குவதாக பொய்க் கணக்கு எழுதப்படுகிறது.
 
முறைகேடு மூலம் வரும் தொகை அதிமுக அமைச்சர்களுக்காக இந்தோனேஷியாவில் உள்ள ஒரு பிரபல வங்கியில் சேமிக்கப்படுட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ அல்லது  மின்வாரிய அதிகாரிகளோ மறுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :