கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவிற்கு விருது


Suresh| Last Updated: சனி, 21 நவம்பர் 2015 (08:33 IST)
கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருதை மத்திய அமைச்சர்  அருண் ஜேட்லி வழங்கினார்.

 

 
சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்
 
இந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு  ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விருதை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர்.


இதில் மேலும் படிக்கவும் :