ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்: கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

azhagiri
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்
siva| Last Updated: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (15:32 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாதவராவ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அவருடைய மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கும் முன்னரே ஒரு வேட்பாளர் கொரோனாவால் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடக்கும் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் சற்று முன் பேட்டியளித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் தான் ஜெயிப்பார் என்றும் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என்றும் மீண்டும் இடைத் தேர்தல் நடந்தால் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :