வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:33 IST)

என் மகன் நிரபராதி என்று நிரூபித்து விடுதலை வாங்குவேன் - அற்புதம்மாள் நம்பிக்கை!

ராஜீவ் கொலை வழக்கில் 7 விடுதலை தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது:-
இந்த வழக்கு திடீரென அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. திடீரென 5 பேர் மீண்டும் விசாரிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர். 23 ஆண்டு காலம் கழித்து இப்போது மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சொல்வது வேதனையளிக்கிறது. என் மகன் நிரபராதி என்று நிரூபித்துள்ளோம். இப்போது மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்று என் மகன் விடுதலை என்ற அறிவிப்பு வரும். உங்களையெல்லாம் மகிழ்ச்சியோடு சந்திக்கலாம் என்று இருந்தேன் என்று கண்ணீருடன் கூறினார்.
 
இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவை கண்டு பின்வாங்க மாட்டேன். மேலும் இதை விட வேகமாக, பலமாக போராடி என் மகன் ஒரு குற்றமும் செய்த நிரபராதி என்பதை உறுதிப்படுத்தி விடுதலை வாங்கிக் கொடுப்பேன் என்று ஆவேசமாக கூறினார். மேலும் இது நாள் வரை எனது போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கூறினார்.
 
மேலும் செய்தியாளர்கள் கேட்ட இதில் அரசியல் உள்ளதா என்ற கேள்விக்கு பதல் அளித்த அற்புதம்மாள், ஆமாம். இதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். அவர்களை அரசியலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கோபமாகக் கூறினார்.