செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 8 அக்டோபர் 2025 (10:05 IST)

உங்களை சந்திக்க வருகிறேன்! கரூர் செல்லும் விஜய்! - டிஜிபியிடம் தவெக மனு?

Vijay

கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்கள் குடும்பங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு கேட்டு இன்று டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும், தவெக தலைவர் விஜய் அறிக்கை, வீடியோ வெளியிட்டதை தாண்டி மக்களை சென்று சந்திக்கவில்லை என்ற புகார்கள் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வீடியோ கால் மூலமாக பேசிய விஜய், விரைவில் அவர்களை நேரில் வந்து சந்திப்பதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து விஜய் கரூர் செல்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மேலும், கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக இன்று டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப,செ அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த வாரத்திற்கு விஜய் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K