விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கினேனா? வைகோ ஆவேச பதில்


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (23:15 IST)
எந்த சூழ்நிலையிலும் நான் விடுதலைப்புலிகளிடம் பணம் பெறவில்லை என பொதுச் செலயாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–
 
மக்கள் நல கூட்டியக்கம் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கமாகும். இந்த இயக்கம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக சூழ்நிலையும் கனிந்து வருகிறது.
 
சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் இந்த இயக்கம் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். இந்த இயக்கத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம்.
 
நான் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசியல் நடத்துவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களே சொல்லெனா துன்பத்தில் துவண்டுபோய் உள்ளனர். அவர்களிடம் போய் பணம் வாங்கிக் கொண்டு நான் அரசியல் நடத்தினால், அதைவிட ஒரு ஈனத் தொழில் வேறு எதுவும் இல்லை. அது போன்ற தவறுகளுக்கு இந்த வைகோ எந்த நிமிடமும் வாய்ப்பு தரமாட்டான் என்றார் ஆவேசமாக. 
 


இதில் மேலும் படிக்கவும் :