வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 மே 2016 (17:27 IST)

விஜயகாந்த், திருமாவளவன் தோற்பார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை - வைகோ

விஜயகாந்த் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் தோற்பார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரான வைகோ பரபரப்பாக பேசியுள்ளார்.
 

 
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆகியவை இணைந்து மக்கள் நல கூட்டியக்கத்தை ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்த நால்வர் கூட்டமைப்பு நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக ஒன்றிணைந்து சந்தித்தது. மேலும், இதில் விஜயகாந்தின் தேமுதிக மற்றும் ஜி.கே.வாசனின் தமாகா ஆகியவையும் இணைந்தன.
 
ஆனால், தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் 232 தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இருவரின் தோல்வியும் அடங்கும்.
 
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, ”மக்கள் நலக்கூட்டணிக்கு தோல்வி ஏற்படும் என எதிர்பார்த்தேன். ஏனெனில், பிரசாரங்களின் இறுதி 3 நாட்களில் மக்களிடம் தேர்தல் குறித்து ஆர்வமும் எழுச்சியும் குறைந்து காணப்பட்டது.
 
மக்களின் மனநிலையை என்னால் நன்கு உணர முடியும். அப்போதே மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதை எனது தொண்டர்களிடம் கூறினேன். எனவே, தோல்வியை எதிர்ப்பார்த்து அதனை முழுமையாக எதிர்க்கொள்ளவே தயாராக இருந்தேன்.
 
மக்கள் நலக்கூட்டணி தோல்வியை சந்தித்தது எதிர்பார்த்தது தான். ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் தோற்பார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை.
 
இருவரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு சூழல் நிலவி வரும்போது, கோவில்பட்டி தொகுதியில் நான் போட்டியிட்டுருந்தாலும் என்னை தோற்கடித்திருப்பார்கள்” என வைகோ தெரிவித்துள்ளார்.