வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (23:19 IST)

’ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றேன்’ – பகிரங்கமாக உண்மையை கூறிய சிம்பு

’ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றேன்’ – பகிரங்கமாக உண்மையை கூறிய சிம்பு

2016-ம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணியின் லோகோ மற்றும் வீரர்களை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது.


 


இவ்விழாவில் இந்திய அணியின் வீரேந்திர சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக தமன் இசையில் சிம்பு பாடியிருக்கும் பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிம்பு கூறியதாவது, "இந்தியாவில் கிரிக்கெட் தான் மிகப்பெரிய விளையாட்டு என்பது அனைவருக்குமே தெரியும். என்னை எங்கப்பா சிறுவயதிலேயே பாட்டு பாடி, நடனமாடி சினிமாவில் நடிக்க வைத்திருந்தாலும், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை தான் எனக்குள் எப்போதுமே இருந்திருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் கோயம்புத்தூருக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றேன். என் வாழ்க்கையில் நான் தூங்காமல் இருந்ததே கிடையாது. அன்றைய இரவு முழுவதும் ரயிலில் நின்று கொண்டே சென்றேன்.

அதற்கு காரணம் கிரிக்கெட் மீது இருந்த ஈர்ப்பு தான் காரணம். அங்கும் எங்களை ஒரு சத்திரத்தில் படுக்க வைத்தார்கள். தரையில் படுத்து பழக்கம் இல்லாத நான் தரையில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் கேட்ட போது "தரையில் படுத்து எனக்கு பழக்கமில்லை" என்றேன். அங்கிருந்த 4 பேர் அவர்களுடைய தலையணை எனக்கு ஒரு மெத்தையாக்கி என்னை தூங்க வைத்தார்கள். அந்த நட்பு உயர்ந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு கிரிக்கெட் விளையாட போயும் முதல் 3 மேட்ச் என்னால் விளையாட முடியாமல் போய்விட்டது.

இறுதியாக விளையாடுவது தெரிந்து என் அப்பா என்னை பயங்கரமாக அடித்துவிட்டார். அதோடு கிரிக்கெட் பக்கம் போகவில்லை. கிரிக்கெட் தான் உயிர் என்று இருப்பவர்களுக்கு நல்ல ஒரு இடமாக TNPL அமைந்திருக்கிறது. அதனை உபயோகப்படுத்தி பெரிய ஆளாக வர வேண்டும்" என்றார்.