வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2015 (06:34 IST)

கவுரவ கொலை: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? திருமாவளவன் கேள்வி

தமிழகத்தில் நடைபெற்று வரும் கவுரவ கொலைகளை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
ரெட்டைமலை சீனிவாசனின் 157ஆவது பிறந்தநாள் விழா மற்றும் விடுதலை சிறுத்தைகளின் வெள்ளி விழா பொதுக் கூட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
சமீப காலமாக தமிழகத்தில் சாதி கவுரவ படுகொலை அரங்கேறி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாகவும், கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், படுகொலைகளுக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் பெறும்.
 
மத்திய அரசு கவுரவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு மட்டும் இதுவரை பரிந்துரைக்கவில்லை.
 
மத்திய பிரதேசத்தில தேர்வு வாரிய ஊழல் முறைகேடுகள் இதுவரையில் இருந்த ஊழல்களையெல்லாம் மிஞ்சிய மிக மோசமான ஊழல். இது தொடர்பாக 46 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்.