வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (13:39 IST)

புழல் ஏரியில் ஏற்பட்ட துளையிலிருந்து வெளியேறும் தண்ணீர்: பொதுமக்கள் பீதி

புழல் ஏரியில் ஏற்பட்டுள்ள துளை காரணமாக நீர் வெளியேறி, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


 

 
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிடட்ட மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஏராளமான ஏரிகள் உடைந்துள்ளன.
 
இதனால், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், புழல் ஏரியில் ஒரு துளை ஏற்பட்டுள்ளதால், அந்த துளையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகின்றது.

இந்த நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் அந்தத்துளையை அடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும், அப்பகுதி பொதுமக்கள் அச்சமைடைந்துள்ளனர். புழல் ஏரியின் நீர் மட்டம் 2,228 கன அடியாக உள்ள நிலையில்,ஏரிக்கு1,191 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.