வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 21 ஜனவரி 2015 (15:06 IST)

ஒகேனக்கல் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு சரத்குமார் இரங்கல்

ஒகேனக்கல் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
 
ஒகேனக்கல் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் பயணிகள் பலியான சம்பவம் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. பலதரப்பட்ட பயணிகள் பலவிதமான கனவுகளோடு பயணித்து வரும்போது நிகழும் விபத்துகள், அவர்களது உயிர்களைப் பலி வாங்கிவிடும் சம்பவங்கள் துரதிஷ்ட வசமானவை.
 
தரமான சாலைகள், நன்கு பராமரிக்கப்பட்ட பேருந்துகள், பயிற்சியும் அனுபவமும்மிக்க ஓட்டுநர்கள் அனைத்தும் கலந்து இருந்தால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
 
விபத்தில் பலியானவர் களுக்கும், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர் களுக்கும் தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கூடிய விரைவில் நலமடைய எனது பிரார்த்தனையை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கள் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.