தொடர்புடைய செய்திகள்
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில் பாலாஜி இன்று ஆஜராவாரா?!..
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...
- 10 நாள் போலீஸ் ஷ்டேசனில் கையெழுத்து போடணும்!.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு!..
- வழக்கறிஞர் வந்தா தான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த அனிதா ராதாகிருஷ்ணன்...
- முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டுக்கு வருகிறது ரூ.1000 கோடி முதலீடு.. முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலக புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான ஹிட்டாச்சி தமிழகத்தில் மேலும் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த புதிய முதலீட்டின் மூலம் சென்னை போரூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வரும் ஹிட்டாச்சி தொழிற்சாலைகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளன. இந்த ஒப்பந்த நிகழ்வின் போது தொழில்துறை அமைச்சரும், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். இந்த விரிவாக்ப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, தமிழக இளைஞர்களுக்கு பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. முக்கியமாக, எந்தவொரு கமிஷனும் இல்லாத, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாக நடைமுறையை இந்த அரசு பின்பற்றுவதால், உலகளாவிய முன்னணி நிறுவனங்களும் பெரும் தொழிலதிபர்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஹிட்டாச்சியின் இந்த 1,000 கோடி முதலீடு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
Edited by Siva
