1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Historical Move: CM Vijay Orders Immediate Closure of 717 TASMAC Liquor Shops Near Temples and Schools.

717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு.. பொதுமக்கள், மாணவர்கள் நிம்மதி..!

தமிழக முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் நலன் மற்றும் அமைதியான கல்விசூழலை உறுதி செய்யும் நோக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் 717 மதுபானக் கடைகளை உடனடியாக மூட ஆணையிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பல்வேறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, பதவியேற்ற சில நாட்களிலேயே முதல்வர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
 
இந்த உத்தரவின்படி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள 276 கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 186 கடைகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு மூடப்படுகின்றன. 
 
அரசின் இந்த வேகமான செயல்பாடு, 'சொன்னதைச் செய்யும் அரசு' என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துள்ளது. டாஸ்மாக் வருமானத்தை சார்ந்திருக்காமல், மாற்று வழிகளில் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்ற துணிச்சலான நிலைப்பாட்டை முதல்வர் விஜய் எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை மது அரக்கனிடமிருந்து தமிழகத்தை காப்பதற்கான முதற்படியாக கருதப்படுகிறது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
200 - 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.. கோவில், பள்ளி அருகில் உள்ள கடைகளை அகற்ற முதல்வர் உத்தரவா?