தொடர்புடைய செய்திகள்
- மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட் மாதத்தில் திறப்பு? மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகம்
- தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...
- தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..
- ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...
- திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...
அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறப்பு: ஒரு பைசா செலவில்லாமல் குழந்தை பெற்ற பெண்..
தமிழக மருத்துவத்துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த தம்பதிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு இந்த மையத்தில் செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் இரு குழந்தைகளும் முற்றிலும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளப்படும் இந்த அதிநவீன ஐ.வி.எஃப் சிகிச்சையை, ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு மையத்தை தமிழக அரசு அமைத்தது. பொதுவாக இச்சிகிச்சையில் 30 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே வெற்றி வாய்ப்பு எனக் கூறப்படும் சூழலில், எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர முயற்சியால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
ஒரு பைசா கூட கட்டணம் இல்லாமல் முற்றிலும் இலவசமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது, குழந்தை பாக்கியம் இல்லாத ஏழை தம்பதிகளிடையே ஒரு மிகப்பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
