வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 மே 2015 (17:40 IST)

வாட்ஸ்அப் மூலம் வெளியானது அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ

கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், ஒப்பந்ததாரிடம் லஞ்சப்பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தேனி மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் பணம் கேட்கும் உரையாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், ஒப்பந்ததாரரிடம் லஞ்சப்பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில், கோட்ட பொறியாளராக உள்ள சிதம்பரம், ஒப்பந்ததாரரிடம் பணி வழங்க பணம் வாங்கும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் தற்போது, பரபரப்பாக வெளியாகி பலருக்கும் பார்வேர்ட் செய்யப்பட்டு வருகின்றது.
 
அதில், கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சிதம்பரம், ஒப்பந்தத்தாரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் உள்ளது. அதில், சுமார் 48 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒப்பந்தத்தாரர், பொறியாளர் சிதம்பரத்தின் அலுவலகத்தில், பணக்கட்டை எடுத்து கொடுக்கின்றார். அப்போது, பணத்தை குத்து மதிப்பாக பார்க்கும் சிதம்பரம், பின்பு அதை தனது கைப்பையில் வைக்கும் காட்சியுடன் முடிகிறது அந்த வீடியோ.
 
கன்னியாகுமரி மாவட்ட சாலைப்பணிக்களுக்கான ஒப்பந்தங்களை அளிக்கும் பொறுப்பு வகித்து வருவதால், இந்த வீடியோ காட்சி முக்கியத்துவம் பெருகிறது.
 
மேலும், இந்த வீடியோ காட்சியில் ஒப்பந்தத்தாரரின் உருவம் பதிவாகவில்லை. பணம் வாங்கும் பொறியாளர் சிதம்பரம் உருவம் மட்டுமே பதிவாகியுள்ளது.
 
ஆனால், தான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை என அதிகாரி சிதம்பரம் கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.