+2 தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்


Murugan| Last Updated: திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:37 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கிய  +2 வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

 

 
அந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாடவாரியாக மதிபெண்களை பல மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்
 
மொத்தம் 775 பேர் உயிரியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 
20 பேர் தாவரவியல் பாடத்திலும், 10 பேர் விலங்கியல் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 
இயற்பியல் பாடத்தில் 5 பேரும், வேதியியல் பாடத்தில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
 
எப்போதும் போல், இந்த முறையும் கணிதத்தில் அதிகமான மாணவ மாணவிகள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணக்கு பாடத்தில் மொத்தம் 4341 பேர்  200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 
அதேபோல், வணிகக் கணித பாடத்தில் 1072 பேரும், கணிணி அறிவியல் பாடத்தில் 303 பேரும், வணிகவியல் பாடத்தில் 3084 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :