1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. High Demand for BSc Chemistry as Counselling Begins in Tamil Nadu Government Arts Colleges

பிஎஸ்சி கணிதம் எடுக்க ஆளே இல்லை.. வேதியியல் பாடத்திற்கு குவியும் மாணவர்கள்...

அரசு கலைக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு  தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு பிஎஸ்சி வேதியியல் படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் வரலாறு காணாத அளவில் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 
 
பெரும்பாலான கல்லூரிகளில் 100க்கும் குறைவான இடங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கல்லூரிக்கும் பத்தாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவுக்கு வந்து குவிந்துள்ளன. இதன் காரணமாக, கலந்தாய்வின் முதல் நாளிலேயே வேதியியல் பிரிவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.
 
வேதியியல் படிப்பை முடிப்போருக்கு அதிக வேலைவாய்ப்புகள் இருப்பதும், அரசு கல்லூரிகளில் நிலவும் குறைந்த கல்வி கட்டணமும் தான் இந்த அளவிற்கு விண்ணப்பங்கள் குவிய முதன்மை காரணம் என்று கூறப்படுகிறது. வேதியியலை தொடர்ந்து பிஎஸ்சி இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிகாம் போன்ற படிப்புகளுக்கும் மாணவர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
 
அதேநேரம், பிஎஸ்சி கணிதவியல் பாடப்பிரிவுக்கு மட்டும் இந்த ஆண்டு மிக குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்களே வந்துள்ளன. இதனால் கணித பாடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல கல்லூரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு முதல் பிஎஸ்சி கணிதத்துடன் 'டாட்டா சயின்ஸ்' பாடத்தையும் இணைத்து கல்லூரிகள் புதிய பாடப்பிரிவாக வழங்கி வருகின்றன.
 
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
தவெக ஆட்சி.. ஆனா திமுக சிஸ்டம்!.. விஜய் முன்னால் இருக்கும் சவால்!...