வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், காவிரி டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். விவசாயிகள் வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம்.
நாளை பிற்பகலில் காவிரி டெல்டா கடலோரப் பகுதிகளில் மழை துவங்கி, இரவு நேரத்தில் பரவலாகப் பெய்யும்.
டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை பதிவாகும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதால், வேளாண் பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
மேலும் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் டிசம்பர் 15 வரை மழை வாய்ப்பு குறைவு.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva