தொடர்புடைய செய்திகள்
- இன்றும், நாளையும் வெளுக்கப் போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!
- 7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!
- கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!
- 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!
- தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வெயிலும் இருக்கும்! - சென்னை வானிலை ஆய்வு மையம்!
இன்று இரவுக்குள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நிலம் குளிர்ந்து வெயில் தணிந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
