வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 மே 2016 (12:05 IST)

பி.ஆர்.பி. உள்ளிட்டோர் மீதான கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கிரானைட் முறைகேடு தொடர்பாக, பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் மீதான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக பி.ஆர்.பி நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இதில், அரசு பட்டா இடங்களில் அடுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்க வேண்டும் என முன்னாள் ஆட்சியர் சுப்பிரமணியம் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கு மீதான விசாரணை திங்களன்று நடைபெற்றது. வழக்கின் விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.
 
மேலும், கனிம வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவனிடம், அரசு வழக்கறிஞர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....