வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (13:29 IST)

பீனிக்ஸ் மால் போனவங்க உஷார்! – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீனிக்ஸ் மால் சென்றவர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரியலூரில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து வந்தவர் என்பதை அறிந்த சுகாதாரத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவருடன் பணியாற்றிய சக ஊழியருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பீனிக்ஸ் மால் மூடப்பட்டது. பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்கள் முன்பு பீனிக்ஸ் மால் சென்றவர்களுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பீனிக்ஸ் மாலில் பணியாற்றுபவர்கள், அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.