16 வயது மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த செந்தில் ஆறுமுகம், நாசரேத் பள்ளி செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது, ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் சிவநேசன் அவரை வழிமறித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் செந்தில் ஆறுமுகம், தன்னை சிவநேசன் தாக்கியதாக உறவினர்களிடம் கூறியதையடுத்து, 16 வயது மாணவர் மற்றும் மற்ற உறவினர்கள் சிவநேசனிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த மோதலில், சிவநேசன் தான் வைத்திருந்த கீ செயினில் இருந்த சிறிய கத்தியால் அந்த 16 வயது மாணவரை குத்தியதாகக் கூறப்படுகிறது. மாணவரின் வயிற்றில் கத்தி உடைந்து உள்ளே இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது.
மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆழ்வார்திருநகரி காவல்துறையினர், தலைமை காவலர் சிவநேசனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Mahendran