அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம்!

jakki vasudev
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 27 நவம்பர் 2020 (13:24 IST)
அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் உடல் ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற ஹாவர்டு மருத்துவ பள்ளியின் கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையம் ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பெயரில் “Sadhguru Center for a Consious Planet” என்ற பெயரில் புதிய மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் மனிதர்களின் விழிப்புணர்வு, ஆற்றல் மற்றும் கருணை ஆகிய 3 அடிப்படை அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் பண்பு நலன்கள் மேம்படுவது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :