வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2015 (20:49 IST)

பிரேக் டவுன் ஆகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய பயணிகளுக்கு சிக்கன் பிரியாணி

வேலூரில் நடுவழியில் பிரேக் டவுன் ஆகி நின்ற அரசு பேருந்தை தள்ளிவிட்டு உதவி செய்த பயணிகளுக்கு  கண்டக்டர் பிரியாணி வாங்கி கொடுத்து  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


 

 
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் இருந்து, ஆம்பூருக்கு, நேற்று காலையில் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பின்னர், ஆம்பூருக்கு, அருகே வரும்போது, திடீரென பஸ், 'பிரேக் டவுன்' ஆகி நடுவழியில் நின்றது. டிரைவர் எவ்வளவு முயற்ச்சி செய்தும் பேருந்தை அங்கு இருந்து நகர்த்த முடியவில்லை.

இதைதொடர்ந்து, பேருந்து பணிமனை அதிகாரிகளுக்கு கண்டக்டர் தகவல் கொடுத்தார். ஆனால், அவர்கள் வருவதாக சொல்லி நீண்ட நேரம் ஆனாது. இறுதியில் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் டிரைவரும், கண்டக்டரும் நொந்து போனார்கள்
 
அங்கு இருந்த சில பயணிகள் வேறு பேருந்தில் சென்றுவிட்டனர், 12 பேர் மட்டும் நின்று இருந்தனர். இவர்களிடம் பஸ்சை தள்ளி விடுங்கள் என்றும் தனது செலவில் மதியம் பிரியாணி வாங்கித் தருகிறேன் என்று கண்டக்டர் பயணிகளிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு பயணிகள் வேடிக்கையாக சிரித்தனர். ஆனால், உண்மையிலேயே வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்ததின் பெயரில் பயணிகள் அரசு பேருந்தை சுமார் 2 கி.மீ. துாரம் வரை தள்ளிவிட்டு ஒருவழியாக ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்த்துவிட்டனர்.
 
சொன்னபடியே கண்டக்டர் மணிமாறன், 12 பயணிகளுக்கும், ஆம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில், தன்னுடைய சொந்த பணத்தில் சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்துள்ளார். பயணிகளும் மகிழ்ச்சியுடன் பிரியாணியை சாப்பிட்டு அங்கு இருந்து சென்றனர்.