ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு


K.N.Vadivel| Last Updated: புதன், 3 பிப்ரவரி 2016 (04:43 IST)
தங்கம் விலை மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
 
சென்னையில் பிப்ரவரி முதல் தேதி அன்று, தங்கம், கிராம் ரூ.2,543க்கும், பவுன் ரூ.20,344க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று கிராமுக்கு ரூ.14ம், பவுனுக்கு ரூ.112 ஆம் விலை திடீரென அதிகரித்து இதனால், ஒரு கிராம் ரூ.2,557க்கும், பவுன் ரூ.20,456க்கும் தங்கம் விற்பனையானது.
 
கடந்த சில நாட்களாக சந்தையில், தங்கத்தின் விலையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதுள்ளது. இதுவரை தங்கத்தின் விலை ஏறுமுகம் மற்றும் இறங்கு முகமாக காணப்பட்டது. தற்போது, தங்கத்தின் வலை ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடதக்கது. இதனால் பொது மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 இதில் மேலும் படிக்கவும் :