செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 27 செப்டம்பர் 2025 (09:59 IST)

மீண்டும் 85 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!

Gold price rise

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக வேகமாக உயர்ந்து வரும் நிலையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

சர்வதேச அளவிலான தங்கம் மீதான முதலீடு மற்றும் பொருளாதார காரணங்களால் நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 காரட் ஆபரண தங்கம் வேகமாக விலை உயர்ந்து கடந்த 23ம் தேதி ஒரு கிராம் ரூ.10,640 என்ற புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் மீண்டும் மெல்ல விலை குறைந்த தங்கம் 25ம் தேதி கிராம் ரூ.10,510 வரை குறைந்தது.

 

பின்னர் நேற்று முதலாக விலை உயரத் தொடங்கியுள்ள தங்கம் மீண்டும் ரூ.10,640 ஐ தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.90 விலை உயர்ந்து ரூ.10,640க்கும், ஒரு சவரன் ரூ.720 விலை உயர்ந்து ரூ.85,120க்கும் விற்பனையாகி வருகிறது. 

 

24 காரட் தங்கம் கிராம் ரூ.11,608க்கும், சவரன் ரூ.92,864க்கும் விற்பனையாகி வருகிறது. 

 

வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி, கிராம் ரூ.6 உயர்ந்து ரூ.159 ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.1.59 லட்சமாகவும் உள்ளது.

 

Edit by Prasanth.K