வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2016 (00:01 IST)

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் காவல் நீடிப்பு

தலித் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நீமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
 

 
தலித் மாணவன் கோகுல்ராஜ் திருச்செங்கோடு அருகே படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை போலசார் வலை வீசி தேடிவந்தனர். ஆனால், போலீசார் வசம் சிக்காமல் யுவராஜ் டிமிக்கு கொடுத்து வந்தார். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.
 
இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் சிபிசிஐடி போலீசாரிடம் யுவராஜ் சரண் சரணடைந்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவரது நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவடைந்தது.
 
இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, காணொலிக் காட்சி மூலம் அவரை நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, யுவராஜின் நீதிமன்றக் காவல், ஜனவரி 20 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.