1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2016 (11:33 IST)

அதிமுக, திமுக, கட்சிகளை தொடர்ந்து தமாகா சார்பிலும் விருப்பமனு: ஜி கே வாசன் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அறிவித்துள்ளார்.



தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் விருப்ப மனுக்கள் தற்போது, பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமாகாவும் விருப்ப மனுக்களைப் பெறுவதாக அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமாகா சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்டத் தலைவர், பொறுப்பாளர்களிடம் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை மனுக்கள் தாக்கல் செய்யலாம்.
 
 பொதுத் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனித் தொகுதி மற்றும் மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.