செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 நவம்பர் 2025 (16:37 IST)

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்
அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தூய்மை பணியாளர்களை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசினார்.
 
தூய்மை பணியாளர்களுக்கு அரசு உணவு வழங்க முயற்சிப்பதை பண்ணையார்தனம் என்று விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, "அவர்களின் உரிமையை நிறைவேற்றாமல், பிச்சை போடுவதுபோல செய்கிறார்கள்" என்று சாடினார். 16 ஆண்டுகள் பணி செய்தவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது, சமூக அநீதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் அநீதியை கேட்டறிந்து த.வெ.க. தலைவர் விஜய் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அரசு இந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், விஜய்யுடன் கலந்தாலோசித்து, தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
 
Edited by Siva