செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (12:00 IST)

இன்று முதல் அமலுக்கு வந்தது சமஸ்கிருத செய்தி!

இன்று முதல் அமலுக்கு வந்தது சமஸ்கிருத செய்தி!
தூர்தர்ஷனில் சமஸ்கிருத மொழி செய்திக்கு நேரம் ஒதுக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. வழக்கம்போல் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட பல அரசியல் தலைவர்கள் சமஸ்கிரத செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். செத்துப்போன ஒரு மொழிக்கு எதற்காக செய்தி என்றும் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர் 
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் இன்று முதல் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பானது. பொதிகை சேனலில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு இன்று முதல் அமலானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
காலை 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தி 7 மணிக்கு மாற்றப்பட்டது என்பதும், முதல் 15 நிமிடம் தமிழ் செய்தியும் அடுத்த 15 நிமிடம் சமஸ்கிரத செய்தியும் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்பானதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்