ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வரை அடுத்து முன்னாள் முதல்வரும் வருகை

Sivalingam| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:59 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சற்று முன் புதியதாக முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.வரும் சனிக்கிழமை முதல்வர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நாள். அவர்களின் எதிர்காலம் அந்த ஒரு நாளில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்தான் உள்ளது.குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் ஓபிஎஸ் நிச்சயம் பழிவாங்கப்படுவார் என்று கூறப்படுவதால் அவர் தற்போது சோதனையான காலத்தில் உள்ளார்.

இருப்பினும் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :