’’5 கோடி பேருக்கு உணவு வழங்கத் திட்டம்’’ – பாஜக தலைவர் எல்.முருகன்

l.murugan
Sinoj| Last Updated: புதன், 8 ஏப்ரல் 2020 (18:38 IST)

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா ஏற்படுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயந்துள்ளதாகவும், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு அரசும், சமூக சேவை நிறுவங்களும் தொடர்ந்து உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்
எல்.முருகன், தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளதாகவும், 5 கோடி பேருக்கு உணவு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

Modi Kit, என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, பாஜக சார்பில் மக்களுக்கு வழங்கப்படுகிறது எனவும்,
தமிழகத்தில் இதுவரை 1.75 லட்சம் மோடி கிட் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :